கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் இஸ்ரேலிய (Israel) படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் 32 பேர் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை, தெற்கு காஸாவில் (Gaza) மவாசி என்ற பகுதியில் பாதுகாப்பு முகாம்களில் தங்கியிருந்தவர்கள் மீதும் குண்டு வீசப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
சர்வதேச மனித உரிமைஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர்களை குறிவைத்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் கூறுவது முற்றிலும் பொய்யான தகவல் என்றும் ஹமாஸ் குறிப்பிட்டுள்ளது.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தரப்பினர் சர்வதேச மனித உரிமைகள் விதிகளை மதிக்க வேண்டும் என்று ஐநாவின் சிறப்பு ஒருங்கிணைப்பாளர் Tor Wennesland கேட்டுக்கொண்டுள்ளார்.மேலும் பிணைக்கைதிகளை இருதரப்பினரும் விடுவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்ப்பிடத்தக்கது.
Discussion about this post