விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு(Prabhakaran) பலமாக இருந்த கருணாவை உடைத்ததற்கு ரணில்(ranil) தான் காரணம் என்பதை அறிந்த பிரபாகரன் 2005 ஜனாதிபதி தேர்தலில் ரணிலை தோற்கடிக்க தேர்தல் புறக்கணிப்புக்கு முடிவு செய்தார் என தென்னிலங்கை கட்டுரையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தனது கட்டுரையில் தெரிவித்துள்ளமை வருமாறு,
2002ஆம் ஆண்டு கருணாவை பேச்சுவார்த்தை மேசைக்கு அனுப்பியது பிரபாகரன் செய்த மிகப் பெரிய தவறு. கருணா தாய்லாந்துக்கு(thailand) சமாதானப் பேச்சு வார்த்தை நடத்தச் சென்ற போது இரண்டு பேரை வைத்து அவரை சிக்க வைத்தார் ரணில்.
கருணாவை பிரித்த ரணில்
ஒருவர் அப்போதைய கட்டுநாயக்க விமான நிலையத்தின் பணிப்பாளராக இருந்த காமினி அபேரத்ன(Gamini Abeyratne), மற்றவர் ரணிலின் அரசாங்கத்தில் அரச அமைச்சராக இருந்த அலி சாஹிர் மௌலானா(Ali Zahir Moulana).
அலி சாஹிர் மௌலானா கருணாவின் அண்டை வீட்டார், அண்மையில் அவர் கருணாவின் வேண்டுகோளுக்கு இணங்க, கருணாவின் பிள்ளைகளை கொழும்பில் உள்ள பாடசாலைகளில் சேர்ப்பதற்கு ஏற்பாடு செய்ததாக தெரிவித்திருந்தார். சமாதானப் பேச்சுவார்த்தையின் போது பிரபாகரனுக்கும் கருணாவிற்கும் இடையில் அதிகரித்து வரும் பிரச்சினைகள் மற்றும் முரண்பாடுகள் குறித்து அப்போது பிரதமராக இருந்த ரணிலிடம் தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.
தாய்லாந்து இரவு விடுதிகளில் கருணா சமாதானப் பேச்சுக்காக நாட்டை விட்டு வெளியேறிய கருணாவை காமினி அபேரத்ன, தாய்லாந்தில் உள்ள இரவு விடுதிகளுக்கு அழைத்துச் சென்றதுடன் இருவரும் நண்பர்களாகினர். பின்னர் தாய்லாந்து சென்று கருணாவை இரவு விடுதிகளுக்கு அழைத்துச் சென்று இரவு வெகுநேரம் வரை விருந்து வைப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.
கருணாவுக்கும் பிரபாகரனுக்கும் இடையிலான மோதல் பகிரங்கமானபோது, கருணா கிழக்கிலிருந்து கொழும்புக்கு அலி சாஹிர் மௌலானாவின் வாகனத்தில் தப்பிச் சென்றார். இவை அனைத்தும் பிரபாகரனுக்கு தெரியும்.
சர்வதேச அழுத்தங்களை பொருட்படுத்தாமல், தனது நெருங்கிய கூட்டாளியை உடைத்ததற்கு பழிவாங்கும் வகையில் ரணிலை தோற்கடிக்க முடிவு செய்தார்.
ரணிலை ஜனாதிபதியாக்க ராஜபக்சாக்கள் விரும்பியது ஏன்..!
கருணாவையும் பிரபாகரனையும் பிரித்து புலிகளை அழித்தவர் ரணில் என்பது ராஜபக்சாக்களுக்கு தெரியும்.இதனால்தான் ரணிலை ஜனாதிபதியாக்க அவர்கள் விரும்பியதற்கு ஒரு காரணம், அவர் ‘அரகலய’வைப் பிளந்து அழித்துவிடுவார் என்று அவர்கள் நம்பியதே ஆகும்.
ரணில் இதை நிறைவேற்றினார். மேலும், அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமக்கு எதிராகத் திரும்பும் என்ற அச்சத்தினால், மதுபான அனுமதிப்பத்திரங்களைப் பயன்படுத்தி தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் பிரச்சினைகளை உருவாக்கினார் ரணில்.
கூட்டமைப்பிற்குள் பிளவை ஏற்படுத்திய ரணில்
சிறிதரன்(Sritharan) உட்பட பல தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்களுக்கு மதுபானசாலை அனுமதி வழங்கியதும் தெரியவந்துள்ளது. மதுபான உரிமம் பெற்ற இந்த கூட்டமைப்பு மற்றும் தமிழரசு கட்சி தலைவர்கள், தற்போது கூட்டமைப்பு வாக்குகள் ரணிலின் போட்டியாளரான சஜித்துக்கு(sajith) செல்வதை தடுக்க சுயேச்சை வேட்பாளரை ஆதரிக்கின்றனர்.
கருணாவை ரணில் பிரித்தது அவருக்கு குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்தியது. இல்லையேல் 2005ல் ரணில் ஜனாதிபதியாகியிருப்பார்.
இந்த தவறை சரிசெய்வதற்கான ரணிலின் அண்மைக்கால நடவடிக்கைகளும் பிழையானவை. மதுபான அனுமதிப்பத்திரங்கள் மூலம் தமிழ் வாக்குகளைப் பெற முடியுமா என்பது எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தெரியவரும்
Discussion about this post