அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்புக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கவில்லை என வெளியான செய்திகள் பொய்யானவை என அராசாங்கம் தெரிவித்துள்ளது.ஜனாதிபதி ஊடகப்பிரிவு இன்று (10.09.2024) வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.அரச சேவையில் உள்ள சம்பள முரண்பாடுகளைக் கையாள்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் இடைக்கால அறிக்கையானது, நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியால் கடந்த மாதம் 12ஆம் திகதி அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
சம்பள அதிகரிப்பு இதனை அமைச்சரவை பரிசீலித்து அங்கீகரித்துள்ளதுடன், 2025ஆம் ஆண்டை அடிப்படை ஆண்டாகக் கருதி அனைத்து அரச ஊழியர்களுக்கும் ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கு ஒரு முறை திருத்தத்திற்கு உட்படும் வகையில் 25,000 ரூபாவை மாதாந்த வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், எனவே, இவ்வாறான உணர்வுபூர்வமான விடயங்களை வெளியிடும் போது மக்களை தவறாக வழிநடத்தும் பொய்யான செய்திகளை வெளியிடாமல் உண்மைகளை ஆராய்ந்து சரியான தகவல்களை மக்கள் மயப்படுத்துமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
Discussion about this post