அரச ஊழியர்கள் 5 நாட்களுக்கு மேல் முன்னறிவிப்பின்றி சேவைக்கு சமூகமளிக்க தவறினால், குறித்த நாட்களுக்குப் பிறகு வரும் முதல் 5 நாட்களுக்குள் சேவையை விட்டு வெளியேறுவதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும் என தகவல் வெளியாகியுள்ளது.
பொது சேவை ஆணைக்குழு (Public Service Commission) வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசாங்க உத்தியோகத்தர்கள் முன்னறிவிப்பின்றி சேவைக்கு சமூகமளிக்காத காரணத்தினால் சில சந்தர்ப்பங்களில் சேவையில் இருந்து விலகுவதாக அறிவித்தல் வழங்குவதற்கு ஒரு வருடத்திற்கு மேல் ஆகின்றமை கண்காணிக்கப்பட்டுள்ளதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொதுச்சேவை ஆணைக்குழு
இதன்படி, அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கு சுற்றறிக்கை மூலம் பொதுச்சேவை ஆணைக்குழு இதனை அறிவித்துள்ளது.
ஒரு ஊழியருக்கு பதவி விலகல் அறிவிப்பு வெளியிடப்பட்டால், பொதுச் சேவை ஆணைக்குழுவின் நடைமுறை விதிகளின் பிரிவு 216 இன் படி ஏதேனும் காரணங்கள் அல்லது விளக்கங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுளளது.
Discussion about this post