கடந்த சனிக்கிழமை (08) போன்று எதிர்வரும் 14 ஆம் திகதியும் உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகளை விநியோகிக்கும் விசேட தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.ஜனாதிபதி தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டு விநியோகத்தில் இதுவரை 51% நிறைவடைந்துள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.இந்த நிலையில், தேர்தல்கள் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்ட அனைத்து வாக்காளர்களுக்கும் உத்தியோகபூர்வ தேர்தல் அறிவிப்புகள் விநியோகிக்கப்படும் என அதன் பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க குறிப்பிட்டுள்ளார்.
வாக்காளர் அடையாள அட்டைமேலும், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க செல்லுபடியாகும் அடையாள அட்டை இல்லாத வாக்காளர்கள் தற்காலிக வாக்காளர் அடையாள அட்டையை பயன்படுத்தி வாக்களிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன் படி, மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் தற்காலிக வாக்காளர் அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள முடியும் என ஆணைக்குழு மேலும் குறிப்பிட்டுள்ளது.இந்த நிலையில், தங்கள் பகுதியில் உள்ள கிராம அலுவலர் அல்லது தோட்ட கண்காணிப்பாளர் மூலமாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post