யாழ்ப்பாணம் – நல்லூர் வடக்கு சந்திரசேகரப் பிள்ளையார் கோயில் ஆவணி சதுர்த்திப் பெருவிழா இன்று சனிக்கிழமை காலை 1008 சங்காபிஷேகம், பஞ்சமுகப் பிள்ளையார் அர்ச்சனை மற்றும் தீபாபரதனைகள் நடைபெறவுள்ளன.
ஆவணி மாதம் சதுர்த்தி நாளில் விநாயகர் அவதரித்தார். விநாயகர் அவதரித்த நாளை விநாயகர் ஜென்ம தினமாக நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.
விநாயகர் வழிபாடு என்பது இந்துக்களின் வாழ்க்கை முறை, கலாச்சாரத்தின் வழிபாடாக உள்ளது
ஆவணி சதுர்த்திப் பெருவிழா
அந்தவகையில் நல்லூர் வடக்கு சந்திரசேகரப் பிள்ளையார் ஆலயத்தில் மதியம் 12 மணிக்கு மகேஸ்வர பூசை நடைபெறும். மாலை நிகழ்வுகள் 5 மணியளவில் மூலஸ்தான பூஜையுடன் ஆரம்பமாகி மாலை 6.30 மணியளவில் வசந்த மண்டப பூஜையைத் தொடர்ந்து சுவாமி உள்வீதி, வெளிவீதி உலா வருவார்.
இதேவேளை, சைவசமய அறிவுசார் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழும் பரிசில்களும் வழங்கும் நிகழ்வு மாலை 5.30 மணிக்கு ஆலய உள்வீதி மண்டபத்தில் நடைபெறும்.
அறநெறிப் பாடசாலை மாணவர்களின் வில்லிசை நிகழ்வும் நடைபெறவுள்ளதுடன் இரவு 8.30 மணிக்கு இராப் போசனம் வழங்கப்படும்.
அதேவேளை விநாயகரின் அருளை பெற 21 வகையான இலைகள் கொண்டு அர்ச்சித்து வணங்கினால் கோடி நன்மைகள் கிடைக்கும். உலகத்தின் தோற்றத்திற்கும், ஒடுக்கத்துக்கும் “ஓம்’ என்ற பிரணவ மந்திரமே காரணமாகும்.
அப்பேர்பட்ட பிரணவ மந்திர சொரூபமாகத் திகழ்பவர் விநாயகப்பெருமான். முழுமுதற் கடவுளான அவரை எண்ணிச் செய்யப்படும் எந்த செயலும் உலக நன்மையையும், ஆன்மீக பலத்தையும் மகிழ்ச்சியையும் அளிக்கவல்லது.
Discussion about this post