இலங்கையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் தாக்கப்பட உள்ளதாக வெளியான தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கொழும்பு நீதவான் நீதிமன்றிற்கு அறிவித்துள்ளது
கொழும்பு பிரதான நீதவான் திலின கமகேவின் உத்தியோகபூர்வ அலுவலகத்தில் இவ் விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.இது தொடர்பில் கடந்த 2ஆம் திகதி கொழும்பு நீதவான் அலுவலகத்தில் மிகவும் இரகசிய அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
கண்டி பகுதியில் வசிக்கும் முன்னாள் பொலிஸ் அதிகாரியொருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும், அந்த அதிகாரியிடம் வாக்குமூலம் பதிவு செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதாகவும் பொலிஸார் நீதவானிடம் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு அறிவித்துள்ள நீதவான், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்து ஆஜர்படுத்துமாறும் அறிவித்துள்ளார்
Discussion about this post