கனடாவில் (Canada) கல்வி கற்க வந்துள்ள சர்வதேச மாணவர்கள், வாரம் ஒன்றிற்கு 24 மணி நேரம் மட்டுமே பணி செய்ய அனுமதி என கனடா அரசு தெரிவித்துள்ளது.தொடர்ந்து புலம்பெயர்ந்தோருக்கு கட்டுப்பாடுகள் விதித்து வரும் கனடா அரசு, சர்வதேச மாணவர்களுக்கு மீண்டும் ஒரு கட்டுப்பாட்டை விதித்துள்ளது.குறித்த கட்டுப்பாட்டு விதியானது இம்மாதம் நடைமுறைக்கு வருமென எதிர்ப்பார்க்கப்படுகின்றது
புதிய கட்டுப்பாடுஇது தொடர்பில் புலம்பெயர்தல் துறை அமைச்சர் மார்க் மில்லர் (Marc Miller) தெரிவிக்கையில், கனடாவுக்கு கல்வி கற்க வரும் மாணவர்கள், கல்வியில் மட்டுமே கவனம் செலுத்துவதற்காக இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்
ஆனால், இப்படி வேலை செய்வதற்கு கட்டுப்பாடு விதிப்பது பொருளாதார ரீதியாக பாதிக்கின்றதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.
பொருளாதார பாதிப்புஇந்தியாவிலிருந்து கனடாவுக்குக் கல்வி கற்கச் சென்றுள்ள நீவா (Neeva Phatarphekar) என்னும் மாணவி, இதுவரை வாரம் ஒன்றிற்கு 40 மணி நேரம் வேலை செய்து வந்துள்ளார்.
ஏற்கனவே செலவுகளைக் குறைப்பதற்காக வேறு இரண்டு மாணவிகள் தங்கியிருக்கும் அறை ஒன்றிற்கு மூன்றாவது நபராக தான் சென்று தங்கியிருப்பதாக தெரிவிக்கிறார்.மளிகைப் பொருட்கள் வாங்குவதையும், வெளியே சாப்பிடச் செல்வதையும் தான் குறைத்துவிட்டதாகத் தெரிவிக்கும் நீவா, இப்போது வேலை செய்ய அனுமதிக்கும் நேரத்தை 24 மணி நேரமான குறைக்க அரசு எடுத்திருக்கும் முடிவு, தன்போன்ற மாணவ மாணவியரை மேலும் கடுமையாக பாதிக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
Discussion about this post