Saturday, June 7, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

முல்லைத்தீவு பாடசாலை ஒன்றின் அவல நிலை… குடிநீரில் விலங்கின் சடலங்கள்!

September 1, 2024
in இலங்கை, முக்கியச் செய்திகள்
முல்லைத்தீவு பாடசாலை ஒன்றின் அவல நிலை… குடிநீரில் விலங்கின் சடலங்கள்!
0
SHARES
Share on FacebookShare on Twitter

முல்லைத்தீவில் பாடசாலை ஒன்றின் குடிநீர் தாங்கியில் அழுகிய நிலையில் குரங்குகளின் சடலங்கள் இனம் காணப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் பாவனையிலிருந்து வரும் குடிநீர் தாங்கியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வரும் குறித்த பாடசாலையில், இவ்வாறான நிகழ்வு நடைபெற்றது தொடர்பில் சமூக ஆர்வலர்கள் பலரும் சினத்தை வெளிப்படுத்தியுள்ளனர். மேலும், மாணவர்களுக்கான குடிநீர் சுகாதாரமாக வழங்கப்படாதது தொடர்பில் சகலரும் தங்கள் பொறுப்புக்களை சரிவர செய்திருக்கவில்லை.இவ்வாறு செய்திருந்தால் குடிநீர் தாங்கியில் குரங்கு விழுந்து இறந்து அழுகியிருந்திருக்காது என பெற்றோர்கள் தங்கள் அதிருப்தியினை வெளிப்படுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது

2ஆம் தவணை விடுமுறை முடிந்து 3ஆம் தவணை கற்பித்தல் காலமாக பாடசாலைகள் இந்த வாரம் முதல் நாளிலிருந்து மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.இவவாறான நிலையில் பாடசாலையில் உள்ள குழாய் குடிநீரில் துர்நாற்றம் வீசுவதாக மாணவர்களால் ஆசிரியர்களுக்கு சொல்லப்பட்டுள்ளது.இருப்பினு, அது குறித்து அக்கறையற்று ஆசிரியர்கள் இருந்துள்ளனர்.சில மாணவர்களால் இது தொடர்பில் பழைய மாணவர்களுக்கு தெரியப்படுத்தப்படவே, நீர்த்தொட்டியை பரிசோதிக்க முடிவெடுத்துள்ளனர்.அவ்வாறு பரிசோதித்த வேளை குடிநீர் தொட்டியின் மேல்பக்க மூடி திறந்துவிட்ட நிலையில் இருப்பதை அவதானித்துள்ளனர்.குடிநீர்த்தொட்டியினுள் குரங்கு அழுகிய நிலையில் அதன் உடல் உருக்குலைந்து எலும்புகள் சிதறும் நிலையில் இருந்துள்ளதையும் காணமுடிந்துள்ளது.இந்த நிகழ்வுடன் தொடர்புபட்ட பழைய மாணவர் ஒருவருடன் உரையாடிய போது அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.இதனையடுத்து, சில பெற்றோரும் மற்றும் பழைய மாணவர் சிலரும் இது தொடர்பில் வடக்கு மாகாண சபையின் அபயம், மற்றும் சுகாதார பிரிவினர், கல்வி சார் அதிகாரிகளுக்கு இது தொடர்பில் தெரியப்படுத்தியதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.இதுதொடர்பில் துறைசார் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்துள்ளதோடு குறித்த பாடசாலையில் உள்ள குடிநீர் தாங்கியில் இருந்து நீரை பயன்படுத்துவதற்கு தடை விதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post

அவுஸ்திரேலியாவில் மனைவியை கொன்ற இலங்கையருக்கு நேர்ந்த கதி!

Next Post

அவுஸ்திரேலியாவில் விவாகரத்து பெற்ற மனைவியை வெட்டிக் கொன்ற இலங்கையர்

Next Post
அவுஸ்திரேலியாவில் விவாகரத்து பெற்ற மனைவியை வெட்டிக் கொன்ற இலங்கையர்

அவுஸ்திரேலியாவில் விவாகரத்து பெற்ற மனைவியை வெட்டிக் கொன்ற இலங்கையர்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.