யாழ்ப்பாணம் – ஆறுகால்மடம் பகுதியில் மீற்றர் வட்டிக்கு கடன் பெற்ற இளம் குடும்பப் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.பெண்ணொருவர் கடனை மீளச் செலுத்த முடியாத நிலையில் யாழ்ப்பாணம் – ஆறுகால்மடம் பகுதியில் 2 பிள்ளைகளின் தாயான 28 வயதுடைய சயந்தன் கேதீசா என்பவரே உயிரிழந்துள்ளார்.
கடும் மன உளைச்சல்உயிரிழந்த பெண் மீற்றர் வட்டிக்கு கடன் பெற்று கடை ஆரம்பித்த நிலையில், வியாபாரம் இல்லாத நிலையில் கடையினை மூட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.இந்நிலையில் வாங்கிய கடனை அடைக்க முடியாமையினால், கடன் வழங்குனர்களால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்
இதனையடுத்து பெண் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.இந்நிலையில் மீற்றர் வட்டியால் இளம் தாய் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
Discussion about this post