எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிப்பது என்ற நிலைப்பாட்டினை மீள் பரிசீலனை செய்வது தொடர்பாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு (Sajith Premadasa) விளக்கமளித்துள்ளது.தேர்தல் தொடர்பான தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் நிலைப்பாடு தொடர்பாக சஜித் பிரேமதாச அனுப்பிய கடிதத்திற்கு பதில் வழங்கியதன் மூலம் இது தெளிவுப் படுத்தப்பட்டுள்ளது.அதில், சஜித் பிரமதாச, தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில், ஒற்றையாட்சி முறைமையை ஒழித்து சமஸ்டி அரசியல் யாப்பினை கொண்டுவருவதன் மூலம் மட்டுமே அனைத்து இனங்களையும் அரவணைத்து நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் என்ற உண்மையை வெளியிட்டால் மாத்திரமே தேர்தலைப் புறக்கணிப்பது என்ற நிலைப்பாட்டினை மீள் பரிசீலனை செய்து ஆராய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் புறக்கணிப்புஅத்தோடு, நாட்டின் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு மேற்கூறிய விடயங்களின் அடிப்படையில் தீர்வுகாண விளைகின்றீர்கள் என்ற உண்மை இந்த நாட்டில் வாழும் சிங்கள மக்களுக்கு வெளிப்படுத்தப்படல் வேண்டும் என்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வலியுறுத்தியுள்ளது
இந்த நிலையில், தேர்தல் விஞ்ஞாபனத்தில் மேற்படி விடயங்கள் தெளிவாகவும் முழுமையாகவும் உள்ளடக்கப்படும் நிலையில், ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிப்பது என்ற நிலைப்பாட்டினை மீள் பரிசீலனை செய்வது தொடர்பாக ஆராய முடியும் என்பதனையும் முன்னணி சுட்டிக்காட்டியுள்ளது.
Discussion about this post