வரலாற்றுச் சிறப்புவாய்ந்த யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோட்சவத்தின் 19ஆம் நாள் திருவிழாவான சூர்யோற்சவ உற்சவம் இன்று காலை (27) மிக சிறப்பாக இடம்பெற்றது.
இன்று காலை 6.45 மணியளவில் இடம்பெற்ற வசந்தமண்டப பூஜையை தொடர்ந்து ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தில் எழுந்தருளிய சூரியபகவான் உள் வீதியுலா, மற்றும் வெளி வீதியுலாவும் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
செப்டெம்பர் முதலாம் திகதி தேர் திருவிழா
நல்லூர் மகோற்சவத்தின் தேர் திருவிழா செப்டெம்பர் முதலாம் திகதி, ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெறவுள்ளது.
இதேவேளை, நல்லூர் கந்தன் திருவிழாவை முன்னிட்டு புலம்பெயர் தமிழர்கள் ஆயிரக்கணகாணோர் தாயகத்திற்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்த்க்கது.
Discussion about this post