இலங்கை(sri lanka) தேசத்திற்கு ஒரு துணிச்சலான தலைவர் தேவை எனவும் அதற்காக அடுத்த தலைவரை தேர்ந்தெடுங்கள் என இலங்கை வாக்காள பெருமக்களிடம் கத்தோலிக்கப் பேரவை கோரிக்கைகளை முன்வைத்துள்ளது.
பேரவையின் தலைவர் அருட்தந்தை ஹரோல்ட் அந்தோனி பெர்னாண்டோ மற்றும் செயலாளர் பிசப் ஜே.டி.அந்தோனி ஜெயக்கொடி ஆகியோர் கையொப்பமிட்டு வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
துணிச்சலான தலைவர் தேவை
மக்கள் நலன் மற்றும் நாட்டின் வளர்ச்சியில் தங்கள் சுயநலம் மற்றும் நிகழ்ச்சி நிரல்களுக்காக அதிகாரப் பதவிகளுக்காக மக்களைத் தூண்டும் அரசியல் கலாசாரம் மாற்றப்படவேண்டும்.
அத்துடன், நீண்டகாலமாக எதிர்பார்க்கப்படும் ஊழலையும் அதன் உண்மையான தீமைகளையும் இல்லாதொழிக்க தேசத்திற்கு புத்திசாலித்தனமான மற்றும் துணிச்சலான தலைவர் தேவை என இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவை வலியுறுத்தியுள்ளது.
Discussion about this post