தாய்லாந்தில் பொதுவெளியில் பெண் பத்திரிகையாளரை அரசியல்வாதி அறைந்த சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.தாய்லாந்து நாட்டின் முன்னாள் ராணுவ தளபதியாக இருந்த பிரவிட் வாங்சுவான், பலத் பிரசாரத் என்ற கட்சியை அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.
மூத்த அரசியல் தலைவரான வாங்சுவானிடம் ஒரு பெண் பத்திரிகையாளர், அந்நாட்டின் புதிய பிரதமர் பேடோங்டர்ன் ஷினவத்ரா பற்றி கேள்வி எழுப்பியுள்ளார். அந்த கேள்வியினால் கோபமடைந்த அவர், பெண் பத்திரிகையாளரின் தலையில் அடித்துள்ளார்.பின்னர் கோபத்துடன் அவர் கிளம்பி சென்றார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி அந்நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக பெண் பத்திரிகையாளர் புகார் அளித்துள்ளார்.இதனையடுத்து இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று அந்நாட்டு பாராளுமன்றம் தெரிவித்துள்ளது. பெண் பத்திரிகையாளர் தாக்கப்பட்டதற்கு தாய்லாந்து பத்திரிகையாளர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
Discussion about this post