கனடாவில் மாற்றுத்திறனாளிகள் அதிக அளவில் உணவு பாதுகாப்பின்மை பிரச்சனையை எதிர்நோக்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.கனடிய புள்ளி விபரவியல் திணைக்களம் இது தொடர்பான தகவலை வெளியிட்டுள்ளது.மாற்றுத்திறனாளிகள் ஏனையவர்களை விடவும் உணவு பாதுகாப்பின்மை பிரச்சனைகளினால் இரண்டு மடங்கு பாதி பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
கனடாவில் மாற்றுத்திறனாளிகள் மத்தியில் 26 .4வீத உணவு உணவு பாதுகாப்பின்மை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.சாதாரண பொதுமக்கள் மத்தியில் இந்த வீதம் 12.5 ஆக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.இதேவேளை, உணவிற்கான தட்டுப்பாடு, தரமான உணவு, உணவின் அளவு, உணவு வேலைகளை தவிர்த்தல் போன்ற பல்வேறு வழிகளில் உணவு பாதுகாப்பின்மை நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.
Discussion about this post