இலங்கை இராணுவம் தன்வசம் வைத்திருக்கும் மக்களின் காணிகளை விடுவிப்பதுடன் புதிதாக காணிகளை கைவசப்படுத்துதலை நிறுத்தவேண்டும் என என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இலங்கையின் மனித உரிமை ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளரின் முழுமையான அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
மனித உரிமை ஆணையாளரின் அறிக்கைஅந்த அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, இலங்கைஇராணுவம் தன்வம் வைத்திருக்கும் காணிகளை விடுவித்தல்,வடக்குகிழக்கில் புதிதாக காணிகளை கைவசப்படுத்தலை நிறுத்துதல் ,
பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அனைவரைம் விடுதல செய்தல், பாதிக்கப்பட்டவர்களின் சார்பில் நினைவேந்தல் முயற்சிகளில் ஈடுபடுவதையும் குற்றச்செயல்களில் இருந்து நீக்கி,அவற்றுக்கு ஆதரவளித்தல் போன்ற நம்பிக்கையை கட்டியெழுப்பும் வழிமுறைகளை நடைமுறைப்படுத்துவதன் மூலம் நிலைமாற்றுக்கால நீதிக்கான சூழலை உருவாக்கவேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Discussion about this post