உக்ரேனுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவிகளை வழங்குவதாக கனடா உறுதியளித்துள்ளது.கனடிய அரசாங்கம் 5.7 மில்லியன் டாலர்களை உக்கிரேனுக்கு வழங்கவதாக அறிவித்துள்ளது.கனடாவின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் அகமட் உசேன் இந்த உறுதி மொழியை வழங்கியுள்ளார்.
உக்கிரேனிய மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காக இந்த உதவி வழங்கப்படுவதாக அறிவித்துள்ளார்.ரஷ்யாவுடனான போர் ஆரம்பிக்கப்பட்டு சுமார் இரண்டரை ஆண்டுகள் கடக்கும் நிலையில் இந்த உதவி குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.கனடிய சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் ஹுசெய்ன் உக்கிரேனுக்கு விஜயம் செய்யவுள்ளார்.உக்ரேனிய சிறுவர் மருத்துவமனைகளுக்கு அவர் விஜயம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இடம்பெயர்ந்த மக்களுக்கு தேவையான நீர், தங்குமிட வசதிகள், சிறுவர் பாதுகாப்பு, பால் நிலை அடிப்படையிலான வன்முறைகளை தடுத்தல் போன்றவற்றுக்கு இந்த உதவி வழங்கப்பட உள்ளதாக கனடா அறிவித்துள்ளது.இந்த ஆண்டில் உக்கிரேனுக்கு கனடிய அரசாங்கம் மனிதாபிமான அடிப்படையில் 28.2 மில்லியன் டொலர் உதவிகளை வழங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.சர்வதேச தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து கனடிய அரசாங்கம் இந்த நிதியை வழங்கி உதவுகின்றது.சர்வதேச தொண்டு நிறுவனங்கள் உக்கிரேனில் மனிதாபிமான பணிகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post