சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு நீண்டகாலமாக நிலவும் தொழில் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் நிதியமைச்சு கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த விடயத்தை நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க (Shehan Semasinghe) தெரிவித்துள்ளார்.சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஸ்தாபனத்தின் போது புதிய சேவை அதிகாரிகளாக உள்வாங்கப்பட்ட 3027 சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களை பாதிக்கும் பிரச்சினைக்கு தீர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.
அபிவிருத்தி உத்தியோகத்தர்இந்தநிலையில், 3027 சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு ஆரம்பகால சேவை அதிகாரிகளாக கருதப்படுவதற்கு இரண்டாவது சந்தர்ப்பம் வழங்குவதற்கான தொழில்சார் தீர்வு வழங்கப்பட்டதாகவும் இதனால் அவர்களின் அடிப்படை சம்பளம் அதிகரிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நீண்டகாலமாக தீர்க்கப்படாமல் இருந்த இப்பிரச்சினைக்கு தீர்வு காண நிதியமைச்சின் இணக்கம் காணப்பட்டமை சாதகமான நிலை என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Discussion about this post