வவுனியாவில் (Vavuniya) வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணித்தாய் ஒருவருக்கு சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்காத காரணத்தினால் சிசு உயிரிழந்துள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் 7ஆம் விடுதியில் நேற்றிரவு (20) குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.உயிரிழந்த சிசுவின் தந்தையுடன் இணைந்து காணொளி வெளியிட்டுள்ள பொதுமகன் ஒருவர் இந்த சம்பவம் குறித்து மேலும் தெரிவிக்கையில், “சரியான நேரத்திற்கு இந்த தங்கைக்கு சிகிச்சை வழங்கப்பட்டிருந்தால் அந்த சிசுவைக் காப்பாற்றியிருக்கலாம்.
மருத்துவக்கொலைமன்னாரில் இடம்பெற்றதைப் போன்று வவுனியாவில் இடம்பெற்ற ஒரு மருத்துவக்கொலை இது. வவுனியா வைத்தியசாலையின் 7ஆம் விடுதி குழந்தையைக் கொன்றுவிட்டார்கள்.
அத்துடன், சிசுவின் இதயத்துடிப்பு நின்ற பின்னரே தன்னிடம் சிசுவைப் பாரப்படுத்தியதாக அந்த வைத்தியசாலையின் விசேட குழந்தைகள் சிகிச்சைப் பிரிவின் வைத்தியர் ஒருவர் எங்களிடம் தெரிவித்துள்ளார்.அதாவது இறந்து போன ஒரு சிசுவைக் காப்பாற்றுமாறு அந்த வைத்தியரிடம் பாரம் கொடுத்துள்ளனர் என தெரிவித்தார்.இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் உயிரிழந்த சிசுவின் தந்தையினால் வவுனியா காவல்நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Discussion about this post