2022ஆம் ஆண்டுக்குப் பிறகு பலரால் இங்கு அரசியல் செய்ய முடியாமல் போனது. ஆனால் இப்போது யார் வேண்டுமானாலும் சுதந்திரமாக அரசியல் செய்யலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது என்று பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா தெரிவித்துள்ளார்.மக்கள் புரிந்து கொண்டுள்ள அரசியல்இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,கோட்டாபய ராஜபக்சவை(Gotabaya Rajapaksa) ஆட்சிக்குக் கொண்டுவந்தபோது நாங்கள் அதை எதிர்த்தோம். ஆனால் அவரை ஜனாதிபதியாக்க நாட்டு மக்கள் முடிவு செய்தனர். அவரிடம் அரசியல் அனுபவம் இல்லாததால், அவரால் நாட்டை சரியாக நிர்வகிக்க முடியவில்லை.
எனவேதான் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நாட்டின் பொருளாதாரத்தை சரியான முறையில் கையாள்வதில் அனுபவம் உள்ள ஒருவரை ஜனாதிபதியாக்க வேண்டும் என்று நாம் கூறுகின்றோம்.மக்கள் விடுதலை முன்னணியின் பயங்கரவாதத்தால் 2022க்குப் பிறகு பலரால் அரசியல் செய்ய முடியவில்லை. எனினும் இப்போது யார் வேண்டுமானாலும் சுதந்திரமாக அரசியல் செய்யலாம் என்ற நிலை நாட்டில் ஏற்பட்டுள்ளது.ரணிலுக்கு ஆதரவுமக்களுக்கு அரசியல் கட்சிகள் தேவையில்லை என்ற நிலையுள்ளது. எனவே, அரசியலை மக்கள் வேறுவிதமாக புரிந்து கொண்டுள்ளனர்.
மக்களின் வித்தியாசமான எண்ணத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். எதிர்காலத்தில் இந்த நாட்டின் ஜனாதிபதியாக யார் வரவேண்டும் என்பது குறித்து கடந்த காலங்களில் தொடர்ச்சியாக கலந்துரையாடினோம்.ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்க வேண்டும் என்பதை அங்கீகரித்தோம். அதற்கு பல காரணங்கள் உள்ளன.கடந்த காலத்தில் இந்த நாட்டில் ஏற்பட்ட நெருக்கடி நிலையிலிருந்து நாட்டைக் காப்பாற்றுவதற்கு அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. எதிர்காலத்திலும் அவருக்கு ஆணை கிடைக்க வேண்டும். அதன்படி அவருக்கு ஆதரவளிக்க முடிவு செய்தோம் என குறிப்பிட்டுள்ளார்.
Discussion about this post