தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளில் இருவர் பொலிஸாரின் ஆணையை மீறி சென்ற இளைஞன் விபத்தில் உயிரிழந்துள்ளார்.மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் தலைக்கவசம் அணியாமல் வெலிகம்பிட்டியவிலிருந்து கொழும்பு – நீர்கொழும்பு வீதியை நோக்கி பயணித்துள்ளனர்.
டிப்பர் வாகனத்துடன் மோதி விபத்துஇதன் போது, வெலிகம்பிட்டிய சந்திக்கு அருகில் மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு பொலிஸ் அதிகாரிகள் சமிக்ஞை செய்தனர். எனினும் , பொலிஸாரின் கட்டளையையும் மீறி மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் பிரதான வீதியை நோக்கிச் ஓட்டுனர் செலுத்தியுள்ளார்.
இதன்போது, பின் இலக்கத் தகடு இன்றி பயணித்த மோட்டார் சைக்கிள் நீர்கொழும்பு – கொழும்பு பிரதான வீதியிக்கு பிரவேசித்த நிலையில் நீர்கொழும்பிலிருந்து வந்த டிப்பர் வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தை அடுத்து ஏனைய இருவரும் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். விபத்தின் பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த உயிரிழந்தவரின் சகோதரர் உள்ளிட்ட குழுவினர் பொலிஸ் அதிகாரிகளுடன் காரசாரமான வார்த்தை பிரயோகத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது
Discussion about this post