இரண்டு மாடி வீடொன்றில் பராமரித்து வரப்பட்ட கஞ்சா தோட்டமொன்றை குற்றப்பிரிவு அதிகாரிகள் சுற்றி வளைத்த நிலையில், இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த கைது நடவடிக்கையானது நேற்றைய தினம் (18) கொழும்பு – மாலம்பே கஹந்தோட்டை பகுதியில், மேல் மாகாண தெற்கு மாவட்ட குற்றப்பிரிவு அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.வீட்டின் கீழ் தளத்தில் உள்ள அறையில் குளிரூட்டப்பட்ட நிலையில், 174 கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்டிருந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வாடகை வீடு
சுற்றிவளைப்பின் போது, சந்தேக நபர் ஒருவர் போதைப்பொருள் ஒன்றை பொதி செய்த வண்ணம் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட குறித்த போதைப்பொருளின் பெறுமதி சுமார் பத்து கோடி ரூபா எனவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
தேயிலையை பொதி செய்யும் நிலையமாக பராமரிக்கப்பட்டு வந்த குறித்த வீடு வாடகை அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளதாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.நீதிமன்றில் முன்னிலைகைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 25 மற்றும் 48 வயதுடையவர்கள் எனவும், அவர்கள் கடுவெல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
Discussion about this post