பிரித்தானியாவின் புகழ்பெற்ற Sandhurst இராணுவ அக்கடமியில் பயிற்சியை நிறைவு செய்து அண்மையில் வெளியேறிய சிறிலங்கா கெடட் அதிகாரி இரண்டாம் லெப்டினன்ட் மொஹமட் அனீக்(Mohammad Aneek) நாடு திரும்பாதது தொடர்பாக பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அலுவலகம்(The British High Commissione) மற்றும் சிறிலங்கா இராணுவம் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.இந்த அதிகாரி 44 வார பயிற்சிக்குப் பிறகு ஓகஸ்ட் 9 அன்று விடுவிக்கப்பட்டார். இதன்படி ஓகஸ்ட் 11 ஆம் திகதி அவர் இலங்கைக்கு வரவிருந்த போதிலும், அவர் திட்டமிடப்பட்ட விமானத்தில் திரும்பவில்லை.இராணுவ ஊடகப் பேச்சாளர் வெளியிட்ட தகவல்சிறிலங்கா இராணுவத்தின் ஊடகப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் கே.ஏ.என்.ரசிக குமார, மற்றுமொரு விமானம் மூலம் இலங்கை(sri lanka) திரும்பவுள்ளதாக அந்த அதிகாரி, அதிகாரிகளிடம் கூறியதாக தெரிவித்தார்.
இந்த அதிகாரிக்கு ஓகஸ்ட் 11 ஆம் திகதி இலங்கை திரும்புவதற்கு இலங்கை உயர்ஸ்தானிகராலயம் விமான வசதிகளை தயார் செய்திருந்த போதிலும், அவர் அன்று வரவில்லை ஆனால் பின்னர் வருவார் என தெரிவிக்கப்பட்டது.அவர் வருகை தராதது குறித்து இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
காணாமற்போன அதிகாரி பிரித்தானியாவிற்கான இலங்கை உயர் ஸ்தானிகர் ரோஹித போகொல்லாகமவும்(Rohitha Bogollagama) இந்த உத்தியோகத்தரின் வெளியேற்ற அணிவகுப்பில் வாழ்த்து தெரிவிப்பதற்காக வந்திருந்தார்.
காணாமற்போன அதிகாரி மாவனல்லை இம்புல பிரதேசத்தில் வசிப்பவராவார். அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஏனையோரையும் காணவில்லை என சமூக ஊடகங்களில் பரவிவரும் வதந்திகள் முற்றிலும் பொய்யானவை என இராணுவ ஊடகப் பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
Discussion about this post