ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்களுக்கு தேசியக் கொடியை பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த தகவலை தேர்தல் அலுவலகங்களை தயார்படுத்துவது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் தேர்தல்கள் ஆணைக்குழு (Election Commission) தெரிவித்துள்ளது.
ஜனாதிபதித் தேர்தல்
தேர்தல் பிரசாரங்களுக்கு தேசிய கொடி அல்லது மத சின்னங்களை பயன்படுத்த வேண்டாம் என தேர்தல்ஆணைக்குழு அறிவித்துள்ளது.
மதச் சின்னங்களை பிரசாரத்திற்கு பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மாதிரி வாக்குச் சீட்டு
மேலும், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான மாதிரி வாக்குச் சீட்டை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
39 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 37 இடத்தைப் பெற்றுள்ளார்.
அந்தவகையில் ஒவ்வொரு வேட்பாளரின் பெயர் மற்றும் சின்னங்கள் வரிசை ஆகியவை மாதிரி வாக்குச் சீட்டில் அச்சடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post