வடக்கு கிழக்கினை இணைக்க அனுமதிக்க மாட்டோம் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச (namal rajapaksa) குறிப்பிட்டார்.
பேருவளையில் நேற்று (18) இடம்பெற்ற ஆதரவாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
இணைந்த வட கிழக்கில் அதிகார பகிர்வு என்ற விடயம் தற்போது கோரிக்கையாக முன்வைக்கப்பட்டு வருகிறது.
அதிகார பகிர்விற்கு ஆதரவில்லை
இந்த நிலையில் இணைந்த வடகிழக்கில் அதிகார பகிர்வு என்ற விடயத்திற்கு தாம் ஆதரவு வழங்கப்போவதில்லை என கூறி உள்ளார்.
இதேவேளை வடக்கு கிழக்கிற்கு காணி,காவல்துறை அதிகாரங்கள் ஒருபுர்தும் வழங்கப்படமாட்டாது என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post