புத்தளம் மாவட்டம், வென்னப்புவ பகுதியில் தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குடும்ப பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.வாய்க்கால் – சிந்தார்த்திரி பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய 4 பிள்ளைகளின் தாயே இவ்வாறு நேற்றையதினம் (18-08-2024) உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த குறித்த பெண் கடந்த 9 ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலை செய்து வந்துள்ள நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் இலங்கைக்கு வந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை திரும்பிய குறித்த பெண் தனது வீட்டிற்கு வருகை தந்து 3 நாட்கள் மாத்திரம் கணவன் மற்றும் பிள்ளைகளுடன் தங்கிய நிலையில், கணவனுடன் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக வீட்டை விட்டு வெளியேறி கொச்சிக்கடை பகுதியில் வாடகை வீடொன்றில் தங்கியுள்ளார் என விசாரணையின் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, 11 ஆம் திகதி தனது பிள்ளையின் பிறந்த நாளை கொண்டாடுவதற்காக கடந்த 7 ம் திகதி குறித்த பெண் மீண்டும் வீட்டுக்கு வருகை தந்துள்ளார்.
வீட்டிற்கு வருகை தந்த நாள் முதல் கணவனுக்கும் – மனைவிக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், கடந்த 13ஆம் திகதி மாலை நபர் ஒருவருடன் தொடர்புகொண்ட குறித்த பெண் தன்னை வந்து அழைத்துச் செல்லுமாறு தொலைபேசியில் கூறியுள்ளார் என்றும் கணவன் பொலிஸ் விசாரணையில் கூறியுள்ளார்.தனது மனைவி கொச்சிக்கடை பகுதியைச் சேர்ந்த நபரொருவருடன் நீண்ட காலமாக கள்ளத் தொடர்பில் இருந்ததாகவும், தன்னுடனான உறவைத் துண்டித்து வாழ்ந்து வந்ததாகவும் கணவன் தெரிவித்துள்ளார்.
மனைவி வெளிநாட்டில் வசித்த வந்த போது தனது 4 பிள்ளைகளையும் தானே பராமறித்து வந்ததாகவும், வெளிநாட்டிலிருந்து இலங்கை திரும்பியதும், கள்ளத் தொடர்பில் இருந்த நபருடன் வாழ விருப்பம் என்றால் 4 பிள்ளகளையும் பராமறித்துக் கொண்டு அந்த நபருடனேயே இருக்குமாறும் மனைவியிடம் கூறியதாகவும், பிள்ளைகளை தனது பராமறிப்பில் வைத்துக் கொள்ள மனைவி ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் கணவன் தெரிவித்துள்ளார்.
Discussion about this post