புதிய இணைப்புநாட்டின் சிலபகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.அந்தவகையில், இரத்தினபுரி பிரதேசத்தில் களு கங்கையின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.குடாகே – மில்லகந்த பிரதேசத்தை அண்மித்த பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் காணப்படுவதுடன், ஜின்கங்கையின் நீர்மட்டம் பத்தேகம பகுதியில் அதிகரித்து வருகின்றது.
அத்துடன், அத்தனகலு ஓயாவின் நீர் மட்டம் தூனமலே பகுதியில் அதிகரித்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.முதலாம் இணைப்புஇலங்கையைச் (srilanka) சூழவுள்ள பகுதிகளில் காணப்படுகின்ற கீழ் வளிமண்டலத்தில் தளம்பல் நிலை காரணமாக நாட்டின் தென்மேற்குப் பகுதியில் தற்போது நிலவும் மழை நிலைமை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.கனமழை காரணமாக பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு நேற்று (17) மாலை 4 மணி முதல் இன்று (18) மாலை 4 மணி வரை விடுக்கப்பட்டுள்ளது.கடந்த காலங்களில் மண்சரிவு ஏற்பட்ட இடங்கள், குறிப்பாக மலைப் பகுதிகளில் அதிக கவனம் செலுத்துமாறும் மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழைமேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றதுநாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
பலத்த காற்று
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.
மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
Discussion about this post