இலங்கையில் பெய்துவரும் பலத்த மழையினால் குடா கங்கையின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதால் சில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.அதன்படி, இன்று சனிக்கிழமை (17) காலை 9.00 மணி முதல் சுமார் 48 மணி நேரத்திற்கு மூன்று பிரதேச செயலகங்களுக்கு வெள்ளப் பெருக்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வெள்ளத்தில் மூழ்க வாய்ப்புகுடா கங்கையின் ஆற்று நீர் மட்டத்தை ஆய்வு செய்ததையடுத்தே நீர்ப்பாசன திணைக்களத்தினால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அந்தன்படி களுத்துறை மாவட்டத்தின் புலத்சிங்கள, மதுராவளை மற்றும் பாலிந்த நுவர ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட குடா கங்கை மற்றும் மகுர கங்கையின் தாழ்வான பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்க வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.வான் கதவுகள் திறப்பு அதேவேளை களுத்துறை மாவட்டத்தில் பெய்து வரும் மழை காரணமாக குக்குலே கங்கை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் இன்று சனிக்கிழமை (17) காலை திறக்கப்பட்டுள்ளதாக பிரதேச செயலகம் தெரிவித்துள்ளது.அத்துடன் புலத்சிங்கள பிரதேசத்தில் பல தாழ் நில பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நீர்த்தேக்கத்திலிருந்து 180 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் அந்த பகுதியின் அருகில் வசிக்கும் மக்கள் மிக எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
Discussion about this post