எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு தெரிவித்து ”இயலும் ஶ்ரீலங்கா” உடன்படிக்கையில் 34 தரப்புக்களைச் சேர்ந்தவர்களும் கைச்சாத்திட்டுள்ளனர்.
இந்த நிகழ்வு பத்தரமுல்லையில் இன்று(160 காலை நடைபெற்றது.
மஹஜன எக்சத் பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தி பிரதமர் தினேஷ் குணவர்தன, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மற்றும் அமைச்சர் மஹிந்த அமரவீர, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தி அமைச்சர் ரமேஷ் பத்திரன, பிரசன்ன ரணதுங்க மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, புதிய கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார், வடமேல் மாகாண ஆளுநர் நசீர் அஹமட், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன், இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன், தேசிய காங்கிரஸின் தலைவர் ஏ.எல்.எம்.அதாவுல்லா, தேசிய சுதந்திர முன்னணியின் மொஹமட் முஸம்மில், இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வடிவேல் சுரேஷ், பாராளுமன்ற உறுப்பினர் எம்.வேலுகுமார், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் எஸ்.எம்.எம்.முஷாரப் முதுநபீன், இஷாக் ரஹ்மான், அலி சப்ரி ரஹீம், சத்துர சேனாரத்ன, தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி, ஈரோஸ் கட்சியின் செயலாளர் நாயகம் ராஜநாதன் பிரபாகரன், இலங்கை ஜனநாயக கட்சியின் அன்வர் எம்.முஸ்தபா, தமிழ் தேசிய முற்போக்கு கட்சியின் கே.கே.உமாபதி உள்ளிட்ட 34 தரப்புக்களைச் சேர்ந்தவர்கள் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளனர்.
சர்வமத தலைவர்களின் ஆசீர்வாதத்துடன் ”இயலும் ஶ்ரீலங்கா” உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.
Discussion about this post