மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவராக நீதியரசர் ஆர். எம்.சோபித ராஜகருணா (R. M. Sobitha Rajakaruna) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் (Ranil Wickremesinghe) நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று (16) ஜனாதிபதி அலுவலகத்தில் ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவராக ஆர்.எம்.சோஹித ராஜகருணா பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
பதில் தலைவர் நியமனம்
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராக கடமையாற்றிய நிஷ்சங்க பந்துல கருணாரத்ன (Nissanka Bandula Karunaratne) வெளிநாட்டிற்கு சென்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அவர் நாடு திரும்பும் வரை இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பதவிப் பிரமாண நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவும் (Saman Ekanayake) கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post