யாழ்.அரியாலைப் பகுதியில் 156 கிலோவுக்கு அதிகமான கேரள கஞ்சாவுடன் 2 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளனர்.இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மன்னார் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள், இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட ஒரு தொகை கேரள கஞ்சாவுடன் யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் கைப்பற்றினர்.இதன்போது, யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த 39 மற்றும் 44 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து 156 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.இதன் பெறுமதி சுமார் 42 மில்லியன் ரூபா என பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
Discussion about this post