நின்று கொண்டிருந்த இருவர் மீது இ . போ . சபைக்கு சொந்தமான பேருந்தொன்று மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றையவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .பண்டாரகம – கெஸ்பேவ வீதி கல்கடே சந்தியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் அக்குரஸ்ஸ பகுதியைச் சேர்ந்த 45 -55 மதிக்கத்தக்க வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.
விபத்தில் பேருந்தில் பயணித்த பெண் ஒருவரும் கையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
மேலும் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பண்டாரகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
Discussion about this post