எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் ஆகஸ்ட் 15 ஆம் திகதி தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகம் அமைந்துள்ள சரண மாவத்தையைச் சுற்றியுள்ள பகுதி விசேட பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது.எனவே, அன்றைய தினம் மக்கள் வேலைக்காகவோ அல்லது வேறு நடவடிக்கைகளுக்காக அந்தப் பகுதிக்கு வருவதைத் தவிர்க்குமாறும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க (R.M.A.L. Ratnayake) குறிப்பிட்டுள்ளார்.நுவரெலியாவில் (Nuwara Eliya) நேற்று (12.8.2024) இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் தேர்தல் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
தேர்தல் முறைப்பாடுகள்
இதேவேளை, ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான தேர்தல் முறைப்பாடுகள் மேலும் அதிகரித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 17 தேர்தல் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.ஜூலை 31 முதல் நேற்று (11) வரை 337 தேர்தல் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
Discussion about this post