அன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டைப் பொறுப்பேற்றிருக்காவிட்டால் இலங்கை இன்று பங்களாதேஷை விட மோசமான நிலைக்குச் சென்றிருக்கும் என நகர மற்றும் வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சர் பிரசன்ன ரணதுங்க (Prasanna Ranatunga) தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை பொலனறுவையில் (Polanaruvai) நடைபெற்ற சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் மாவட்ட மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, கம்பஹா (Gampaha) பகுதியில் நேற்றையதினம் (10) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றிய அவர் கருத்து தெரிவிக்கையில், “ஜனாதிபதி தேர்தலில் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) வெற்றிப் பெறமாட்டார்.
கட்சி ஆதரவாளர்கள்
பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் உட்பட கட்சி ஆதரவாளர்கள் அனைவரும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு (Ranil Wickramasinghe) ஆதரவாக உள்ளார்கள், ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தை நிச்சயம் தோற்றுவிப்போம்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை வெற்றி பெறச் செய்யும் செயற்பாடுகளை எதிர்வரும் வாரம் முதல் முன்னெடுப்போம் அத்தோடு நாடளாவிய ரீதியில் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுவோம்.” என அவர் தெரிவித்துள்ளார்.
Discussion about this post