இலங்கையில் கடந்த காலங்களில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியினால் மக்கள் வரிசைகளில் காத்திருக்க வேண்டிய தேவையேற்பட்டது.
அத்துடன் இலங்கையில் காணப்பட்ட எரிபொருள் தட்டுப்பாடு, எரிவாயு தட்டுப்பாடு, மின்சார வெட்டு ஆகிய நெருக்கடிகளே முன்னாள் ஜனாதிபதி பதவி விலகுவதற்கு பிரதான காரணமாக அமைந்தது.
இந்த நிலையில் தற்போது இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ளது. மக்கள் புதிய ஜனாதிபதியைத் தெரிவு செய்யவேண்டிய கட்டத்தில் இருக்கின்றார்கள்.
பொருளாதார நெருக்கடி
எதிர்வரும் தேர்தல் முடிவுகள் இலங்கையின் பொருளாதார நெருக்கடிகளை சீர் செய்யுமா அல்லது நாட்டினுடைய பொருளாதாரம் மேலும் அதலபாதாளத்திற்கு செல்வதற்கு வழிவகுக்குமா என்பது தொடர்பில் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.
இது இவ்வாறு இருக்க இலங்கையில் பெட்ரோலியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக அண்மையில் மக்களால் உணரப்பட்டது.
இந்த நிலையில் மூன்றாம் உலகப் போரை நோக்கி உலகம் செல்வதைப் போன்ற இந்தக் காலகட்டத்தில் எண்ணெய்க் குதங்கள் தாக்கப்பட்டால் இலங்கை மிக மோசமான பாதிப்பை எதிர்கொள்ளும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட பேராசிரியர் கோ.அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இலாபம் கொழிக்கும் துறையாக உள்ள பெட்ரோலுக்கான கேள்வி எப்போதுமே குறையாமல் இருப்பதால் இந்த துறையில் அதிகமானோர் முதலிடுவார்கள். ஆனால் வளைகுடா யுத்தத்தினால் பெட்ரோல் விலையில் கடுமையான மாற்றம் ஏற்படும் சந்தர்ப்பத்தில் முதலிடுவதற்கு உகந்த துறையாக தங்கம் இருப்பதால் தங்கத்திற்கான கேள்வி அதிகரித்து தங்க விலை உயரும் என எதிர்வுகூறியுள்ளார்.
Discussion about this post