கை, கால்கள் மற்றும் தடிகளால் தாக்கப்பட்டதில் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நேற்று (09) உயிரிழந்துள்ளதாக தங்காலை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
நேற்றைய தினம் (08) தனது சகோதரனுடன் ஏற்பட்ட வாக்குவாதம் அதிகரித்ததன் காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளான தங்காலை பிரதேச குற்றப்புலனாய்வு பிரிவின் 77064 என்ற பொலிஸ் கான்ஸ்டபிள் சாரதி எல்.ஏ சமன் குமார என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.
தலையில் பலத்த காயமடைந்த அவர் (09) காலி கராபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தர் கடமையை முடித்துக் கொண்டு கதுருபொகுன வடக்கில் உள்ள தனது வீட்டில் இருந்த போது தனது சகோதரர் ஒருவருடன் ஏற்பட்ட தகராறு தொடர்பாக சந்தேக நபரின் இடத்திற்குச் சென்றுள்ளார்.
இதன்போது, பேச்சு வார்த்தை தூரம் சென்றதுடன், கை, கால்கள் மற்றும் தடிகளால் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. காயமடைந்தவர் தங்காலை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் காலி கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.அங்கு பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தங்காலை தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை, சந்தேகநபர் (09) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
Discussion about this post