கனடாவின் பிரிட்டிஸ் கொலம்பிய மாகாணத்தில் சுனாமி அபாயம் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானில் பதிவான பாரிய நில நடுக்கம் காரணமாக சுனாமி அபாயம் ஏற்படக்கூடுமென அச்சம் வெளியிடப்பட்டது.
எனினும், பிரிட்டிஸ் கொலம்பியாவிற்கு சுனாமி அபாயம் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கி வரும் தேசிய சுனாமி மையம் இதனைத் தெரிவித்துள்ளது.
ஜப்பானின் தென் பகுதியில் சுமார் 7.1 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
நில நடுக்கத்தைத் தொடர்ந்து கரையோரப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
நில நடுக்கத்தினால் 9 பேர் கயாமடைந்திருந்தாகவும் சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, நில நடுக்கத்தினால் சுமார் சுனாமி அலைகள் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Discussion about this post