இலங்கையில் (Sri Lanka) புதிய மக்கள் துறையொன்று உருவாக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் (Colombo) உள்ள இலங்கை கண்காட்சி மற்றும் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற கூட்டுறவு இயக்கத்தின் எதிர்காலப் போக்கு குறித்து கலந்துரையாடும் கூட்டத்தில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் துறை
பொதுத்துறை மற்றும் தனியார் துறைகளுக்கு மேலதிகமாக மக்களை பொருளாதார ரீதியாக உயர்த்துவதற்காக மக்கள் துறையொன்று உருவாக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதன் போது தெரிவித்துள்ளார்.
கூட்டுறவு இயக்கத்தை மக்கள் துறையின் இயக்குனராக மாற்றும் வகையில் நாட்டில் சுதந்திரமான வலுவான கூட்டுறவு இயக்கம் கட்டியெழுப்பப்பட்டு வருவதாக ஜனாதிபதி தெரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post