கடந்த ஜூலை மாதத்தில் இலங்கை மத்திய வங்கியின் தங்க கையிருப்பு 35 மில்லியன் டொலர்களில் இருந்து 37 மில்லியன் டொலர்களாக 5.2% அதிகரித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள சமீபத்திய தரவு அறிக்கையின் படி இது தெரியவந்துள்ளது.
இதேவேளை, இலங்கை மத்திய வங்கிக்கு சொந்தமான உத்தியோகபூர்வ வெளிநாட்டு கையிருப்பு சொத்துக்களின் அளவு கடந்த ஜூலை மாதம் சிறிதளவு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வெளிநாட்டு கையிருப்பு
இதன் படி, ஜூன் 2024 இல் 5,654 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவு செய்யப்பட்ட உத்தியோகபூர்வ வெளிநாட்டு கையிருப்பு, ஜூலை 2024 இல் 0.1% குறைந்து 5,649 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.
அத்துடன், உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின் முக்கிய அங்கமான அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த ஜூலை மாத இறுதியில் 5,574 மில்லியன் டொலர்களாக இருந்தது. இது ஜூன் 2024 இல் பதிவான $5,605 மில்லியனிலிருந்து 0.6% குறைவடைந்துள்ளது.
Discussion about this post