ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து விலகிய நாட்டை நேசிக்கும் அனைவரும் மீண்டும் கட்சியில் இணைவார்கள் என நம்புவதாகவும்,மக்கள் பிரதிநிதிகள் தொடர்பில் நாட்டு மக்கள் நம்பிக்கை வைத்துள்ளதாகவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம்(sagara kariyawasam) இன்று (6) தெரிவித்தார்.
மொட்டு முன்வைக்கும் ஜனாதிபதி வேட்பாளர் நாட்டின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி என அவர் குறிப்பிட்டார்.
பெரமுன வேட்பாளருக்கு மக்கள் ஆதரவு
வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டு ஒரு வாரத்தின் பின்னர் நாட்டின் பெரும்பான்மையான மக்கள் அவருக்கு ஆதரவளிப்பார்கள் எனவும் சாகர காரியவசம் தெரிவித்தார்.
கொள்கைப் பிரச்சினை பொதுஜன பெரமுனவுக்கு தனிப்பட்ட நபர்களுடன் போட்டி இல்லை எனவும், ரணில் விக்ரமசிங்கவிற்கும்(ranil wickremesinghe) மொட்டுவிற்கும் இடையில் கொள்கைப் பிரச்சினை இருப்பதாகவும் தற்போதைய ஜனாதிபதி தற்காலிகமாக நியமிக்கப்பட்டவர் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Discussion about this post