சர்வதேசத்திடம் தான் நீதியை எதிர்பார்க்கிறோம் என வலிந்து கடத்தப்பட்டு காணாமல் போன உறவுகளின் சங்க அம்பாறை (Ampara) மாவட்ட தலைவி த. செல்வராணி தெரிவித்துள்ளார்.
திருகோணமலையில் (Trincomalee) இன்று (06) ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், சர்வதேச காணாமல் போன தினத்தினை திருகோணமலை நகரில் போராட்டமாக முன்னெடுக்கவுள்ளோம்.
இலங்கை அரசாங்கம்இதற்காக அரசியல்வாதிகள், சிவில் சமூகத்தை சேர்ந்தவர்கள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.தொடர்ச்சியாக எங்கள் போராட்டத்துக்கு இலங்கை அரசாங்கம் நீதியை பெற்றுத்தரவில்லை.
இதனால் 14 வருடகாலமாக போராட்டத்தில் ஈடுபட்டு எமது உறவுகளுக்காக பாடுபடுகிறோம். இறுதி யுத்தத்தின் போது சுமார் ஒன்றரை இலட்சம் மக்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்கள்.வடக்கு கிழக்கு எட்டு மாவட்டங்களில் போராட்டங்களை நடாத்தி வருகிறோம். எமக்கான நீதியை சர்வதேசம் தான் பெற்றுத்தர வேண்டும் என த. செல்வராணி குறிப்பிட்டுள்ளார்.குறித்த ஊடக சந்திப்பில் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த திருகோணமலை, மட்டக்களப்பு (Batticaloa) மற்றும் அம்பாறை மாவட்ட தலைவிகளும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post