மன்னாரில் கைதுசெய்யபட்டு விளக்கமறியலில் இருந்த வைத்தியர் அர்ச்சுனா உணவுண்ண மறுத்ததாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் , வைத்தியர் அர்ச்சுனா இன்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில் பிணை கோரும் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்படுகிறது எனவும் அறிய வருகிறது.
தொடர்ந்தும் விளக்கமறியல்
அதேவேளை மன்னார் நீதிமன்றில் அருச்சுனாவை நகர்த்தல் பத்திரம் மூலம் பிணையில் எடுப்பதற்கு மூத்தசட்டத்தரணிகள் முயற்சித்தனர்.
அவ்வேளை, மன்னார் நீதிமன்றில் அருச்சுனாவுக்கு எதிரான அரசவைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் குவித்த சட்டத்தரணிகள், அருச்சுனாவை பிணையில் விடுவிக்க எதிர்ப்புத் தெரிவித்தனர். இதன் காரணமாக மருத்துவர் அருச்சுனா தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கபட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
அதே நேரம் அனுமதி இன்றி வைத்தியசாலைக்குள் நுழைந்து வைத்தியருடன் காணொளி பதிவுகளை மேற்கொண்ட இருவரையும் விசாரணைக்கு உட்படுத்துமாறு பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.மன்னார் பொது வைத்தியசாலைக்குள் கடந்த வெள்ளிக்கிழமை (02) இரவு அனுமதியின்றி நுழைந்து பெண்கள் மகபேற்று விடுதிக்குள் பணியாற்றிய வைத்தியருக்கு இடையூறு விளைவித்த துடன் வைத்தியரின் அறைக்கு சென்று அனுமதி இன்றி புகைப்படங்கள், வீடியோ எடுத்தது தொடர்பாக மன்னார் பொலிஸில் வைத்தியர் அர்ச்சுனா விற்கு எதிராக முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டது
Discussion about this post