‘FTA’ என்ற விரிவான தடையற்ற வர்த்தக உடன்படிக்கையின் கீழ் இலங்கையில் தமது கார்கள், வர்த்தக வாகனங்கள் மற்றும் இயந்திரங்கள் உட்பட பல பொருட்களுக்கு சுங்க வரிச் சலுகையை இந்தியா கோரி வருவதாகவும், அதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.அத்துடன், இந்தியாவில் இருந்து தொழில் வல்லுநர்களின் நுழைவை மேலும் எளிதாக்க எளிதான விசா விதிமுறைகளையும் இந்தியா கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தியா மற்றும் இலங்கையின் உயர் அதிகாரிகளுக்கு இடையிலான 14ஆவது சுற்றுப் பேச்சுவார்த்தை அண்மையில் கொழும்பில் நிறைவடைந்தது.
சுங்கவரி சலுகைபேச்சுவார்த்தைக்கு வந்த முக்கிய விடயங்களில், பொருட்கள், சேவைகள் மற்றும் வர்த்தகத்திற்கான தொழில்நுட்ப தடைகள் ஆகியவை அடங்கியிருந்தன.இந்தநிலையில், இந்தியாவுக்கான ஆடை ஏற்றுமதிக்கான ஒதுக்கீட்டை நீக்குமாறு இலங்கை கோரியுள்ளது. தேயிலை மற்றும் சில விவசாயப் பொருட்களுக்கான வரிச் சலுகைகளையும் இலங்கை கோரியுள்ளது.இதேவேளை, இலங்கையில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தலின் பின்னரே இரண்டு நாடுகளுக்கும் இடையிலான அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இரண்டு நாடுகளும் சரக்குகளில் தடையற்ற வர்த்தக உடன்படிக்கையை 2000ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தியுள்ளன.இதன் மூலம், இரண்டு நாடுகளுக்கும் இடையே பொருளாதார உறவுகளை மேம்படுத்தி பலதரப்பட்ட பொருட்களின் மீதான வரிகள் குறைக்கப்பட்டுள்ளன. இப்போது மேலும் பொருட்கள் மற்றும் சேவைகளை சேர்த்து ஒப்பந்தத்தை விரிவுபடுத்த பேச்சுக்கள் இடம்பெறுகின்றன.தற்போதைய சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ், இந்தியா இலங்கையில் இருந்து 50 சதவீத சுங்கவரி சலுகையில் ஆண்டுதோறும் வரையறுக்கப்பட்ட ஆடைகளை இறக்குமதி செய்ய அனுமதித்தது.ஆடைகளுக்கான சலுகைகள்மேலும், இலங்கையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் 15 மில்லியன் கிலோ தேயிலைக்கு 50 சதவீத வரிச்சலுகையை இந்தியா வழங்கியது.இலங்கைக்கான இந்தியாவின் ஏற்றுமதி 2000 நிதியாண்டில் 499.3 மில்லியன் அமெரிக்க டொலரிலிருந்து 2023-24இல் 4.17 பில்லியன் டொலராக அதிகரித்தது. இது 735.2 சதவீத வளர்ச்சியாகும்.
அதே காலகட்டத்தில் இறக்குமதி 44.3 மில்லியன் அமெரிக்க டொலர்களில் இருந்து 1.4 பில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளது.இதற்கிடையில், ஆடை ஏற்றுமதி ஊக்குவிப்பு சபையின் தென் பிராந்திய பொறுப்பதிகாரி சக்திவேல் கூறுகையில், இலங்கைக்கு ஆடைகளுக்கான சலுகைகளை இந்தியா வழங்கக்கூடாது.இதனால் உள்நாட்டு தொழில் பாதிக்கப்படலாம் என்று கருத்துரைத்துள்ளார். நாங்களும் அந்த ஆடைகளை தயாரிக்கிறோம், எனவே இந்தியா அதிக சலுகைகளை வழங்கக்கூடாது என்று தாம் நினைப்பதாக சக்திவேல் கூறியுள்ளார்.
Discussion about this post