இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் இனப் பிரச்சினைகளுக்கு காலத்துக்கு காலம் வந்த ஜனாதிபதிகள் எந்தவித தீர்வுகளும் வழங்கவில்லை என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் (Imran Maharoof) தெரிவித்துள்ளார்.
சிறுபான்மை சமூகம் ஜனாதிபதித் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என ஊடகவியலாளர் ஒருவரால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கையிலேயே இது தொடர்பில் இன்று (04) குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர் “தொடர்ச்சியான ஏமாற்றமே எஞ்சி வந்தது. எனவே தமிழ் மக்கள் நியாயமான தீர்வு வழங்குவார் என்ற நம்பிக்கையுள்ள புதிய ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை ஆதரிக்க முன் வர வேண்டும்
தமிழ் மக்களுக்கான தீர்வு
இந்நிலையில் தமிழ் பொது வேட்பாளரை ஆதரிப்பது என்பதும் பொருத்தமற்றது. ஏனெனில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரால் வெற்றி பெறவே முடியாது என்பது நிதர்சனமாகும்.
இப்படி ஒரு சூழ்நிலையில் தமிழ் மக்களது ஆதரவு இல்லாமல் ஒரு ஜனாதிபதியால் தமிழ் மக்களுக்கான தீர்வு குறித்து சிந்திக்க முடியாத நிலை ஏற்படும்” என தெரிவித்துள்ளார்.
Discussion about this post