20 நாட்களுக்கு முன் மீன் பிடிக்க சென்ற நிலையில் படகு பழுதானதால் நடுக்கடலில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த இலங்கை கடற்றொழிலாளர் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார்.
திருகோணமலையை (Trincomalee) சேர்ந்த அகமது இர்ஃபான் மற்றும் அஸ்டின் என்பவர்களே இந்த சம்பவத்திற்கு முகங்கொடுத்துள்ளனர்.
இதன் படி, சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றைய நபர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிலையில் “நாகை மீனவர்களால்” மீட்கப்பட்டுள்ளார்.
தவறான முடிவு
இதேவேளை, அஸ்டின் என்பவர் பசியின் கொடுமையால் நடுக்கடலில் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், உயிருடன் மீட்கப்பட்ட கடற்றொழிளார் நாகை கடலோர பாதுகாப்பு குழும காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Discussion about this post