உலக பாரம்பரியமாக விளங்கும் சிங்கராஜ வனப்பகுதியை பார்வையிட இந்த ஆண்டு அதிகளவான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த தகவல்களை வனப் பாதுகாப்புத் திணைக்களத்தின் (Department of Forest Conservation) அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அந்தவகையில், கடந்த சில மாதங்களில் மொத்தம் 35000க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் சிங்கராஜ வனப்பகுதியை பார்வையிடதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
உலகளாவிய சுற்றுலா விருதுகள்
இதேவேளை, இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் (SLTPB) சிறந்த சர்வதேச சுற்றுலா சபை என்ற விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விருதானது, ”Travel World Online”இன் ஏற்பாட்டில் இந்தியாவின் (India) புது டெல்லியில் (New Delhi) நேற்று (02) இடம்பெற்ற உலகளாவிய சுற்றுலா விருதுகள் 2024இல் வழங்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், உலகளாவிய சுற்றுலா விருதுகள், சுற்றுலாத் துறையில் சிறந்த பங்களிப்பைச் செய்து, அதன் நிலப்பரப்பை வடிவமைத்து, நேர்மறையான மாற்றத்தை உண்டாக்கும் நிறுவனங்களை கௌரவிப்பதற்கும் கொண்டாடுவதற்கும் ஒரு தளமாக விளங்குகிறது.
இதனடிப்படையில், இலங்கைக்கு சிறந்த சர்வதேச சுற்றுலா சபை என்ற விருது வழங்கப்பட்டுள்ளது.
Discussion about this post