கோழி முதலில் வந்ததா இல்லை முட்டை முதலில் வந்ததா’ என்று கேட்கப்பட்ட கேள்விக்கு நண்பர் பதில் வழங்காததால் அவரை கத்தியால் குத்தி கொன்றவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்கடந்த 24 ஆம் திகதி இந்தோனேசியாவில்(indonesia) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,கோழி முதலில் வந்ததா முட்டை முதலில் வந்ததாதனது நண்பர் கதிர் மார்க்ஸ் என்பவரை (வயது 47) மது அருந்த அழைத்துள்ளார் சக நண்பர். இருவரும் ஒன்றாக மது அருந்திக் கொண்டிருந்தனர். இதன்போது போதை தலைக்கேறவே ‘கோழி முதலில் வந்ததா இல்லை முட்டை முதலில் வந்ததா’ என்று மார்கஸிடம் நண்பர் கேள்வி எழுப்பியுள்ளார்.
கத்தியால் குத்தி கொலைஇந்த விவாதம் வாக்குவாதமாக மாறிய நிலையில் கதிர் மார்கஸ் விவாதம் செய்ய விரும்பாமல் வீட்டிற்கு செல்ல முடிவு செய்தார். இதனால் கோபமடைந்த அவரது நண்பர் ஆத்திரத்தில் மார்க்ஸை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.
மார்கஸ் உடல் கடந்த 26-ம் திகதி அடக்கம் செய்யப்பட்டது. இந்த கொலை தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கைது செய்யப்பட்டவரின் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 18 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கும் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்
Discussion about this post