இலங்கையில் முதல் மின்னணு கடவுச்சீட்டுக்களை வழங்குவதற்கு தயாராகும் வகையில் அடுத்த இரண்டு மாதங்களுக்கு கடவுச்சீட்டுக்களை வழங்குவது மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் டிரான் அலஸ் (Tiran Alles) தெரிவித்துள்ளார்.எதிர்வரும் ஒக்டோபர் நடுப்பகுதியில் மின்னணு கடவுச்சீட்டுக்கள் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னர் பல தொழில்நுட்ப மற்றும் சிக்கல்களை நிவர்த்தி செய்ய வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தநிலையில், நாள்தோறும் வழங்கப்படும் கடவுச்சீட்டுக்களின் எண்ணிக்கை 1000 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது எனினும் அவசர பயணத் தேவைகளைக் கொண்டவர்களுக்கு குடிவரவுத் திணைக்களம் கடவுச்சீட்டுகளை வழங்கி வருவதாக டிரான் அலஸ் குறிப்பிட்டுள்ளார்.
மின்னணு கடவுச்சீட்டுஅத்தோடு, கடந்த காலங்களில் வழங்கப்பட்ட கடவுச்சீட்டுகளில் 30 வீதம் மாத்திரமே பயன்படுத்தப்பட்டதாகவும் மற்றும் மீதமுள்ளவை பாதுகாப்பிற்காக பெறப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளதுடன் ஏதிர்வரும் ஒக்டோபர் நடுப்பகுதிக்குள் மின்னணு கடவுச்சீட்டுக்களை விநியோகிக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், அதற்குள் மின்னணு கடவுச்சீட்டு அமைப்பு தயாராகவில்லையெனில் விண்ணப்பதாரர்களுக்கு சாதாரண கடவுச்சீட்டுக்கள் தொடர்ந்து வழங்கப்படுமென அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post