ஆரம்பத்திலிருந்தே தமது கட்சியின் கொள்கை ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிரானது எனவும், தாம் தொடர்ந்தும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிரான முகாமை பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச (namal rajapaksa) தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் (ranil wickremesinghe) நேற்று(29) இரவும் இன்று(30) காலையும் பேச்சுவார்த்தை நடத்திய பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் சிலர் தன்னை சந்தித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல்
ஜனாதிபதித் தேர்தல் என்பது நாட்டின் தலைவரைத் தெரிவு செய்யும் தேர்தல் எனவும், விருப்பு வெறுப்பு அரசியல் அதில் செல்வாக்கு செலுத்தப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் காய் மற்றும் பூ மக்கள் மத்தியில் உள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கட்சியில் இன்று (30) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
Discussion about this post