சிறிலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட நூற்று ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின்(ranil wickremesinghe) வெற்றிக்காக ஒன்றிணைந்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன(vajira abeywardena) தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என 75 பேர் நேற்று (29) பிற்பகல் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தனவின் கொழும்பு வீட்டிற்கும் கட்சி அலுவலகத்திற்கும் சென்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு தமது ஆதரவை தெரிவித்தனர்
அமைச்சர்கள் மற்றும் எம்.பிக்கள்
இவ்வாறு சென்றவர்களில் பிரசன்ன ரணதுங்க, மஹிந்தானந்த அளுத்கமகே, கஞ்சன விஜேசேகர, ரமேஷ் பத்திரண, கனக ஹேரத், ஜனக வக்கம்புர, மொஹான் பிரதர்ஷன ஆகிய அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என அவர் தெரிவித்தார்.
அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்
ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தனவுடன் இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்ட பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
பொதுஜன பெரமுன தனியான ஜனாதிபதி வேட்பாளரை முன்வைப்பதற்கான தீர்மானத்துடன், ஜனாதிபதிக்கு ஆதரவை தெரிவிக்கத் தயாராக உள்ள ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்களின் பயணம் வேகமெடுக்கும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் தெரிவித்துள்ளார்.
Discussion about this post